வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி! டொலரின் நிலை தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

 இலங்கை ரூபாவிற்கு எதிராக இன்று (17.05.2023) பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 


இன்றைய நிலவரம்

அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலையானது 302.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அத்துடன் அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது 316.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய நிலவரம்

இதற்கிடையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலையானது 305.43 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், டொலரின் விற்பனை விலையானது நேற்று 318.79 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதேசூழலில் தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post Next Post