பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன்னை விட 24 வயது மூத்த பிரிஜிட்டை காதலித்து திருமணம் செய்தது உலகளவில் பேசு பொருளானது.
பாடசாலை ஆசிரியர்
பிரிஜிட் இமானுவல் மேக்ரானின் நாடக ஆசிரியராக இருந்தார். மேலும் அவருக்கு ஒரு வழிகாட்டியாக பிரிஜிட் இருந்தார். மேக்ரான் தனது 15 வயதில் பிரிஜிட் மீது ஈர்ப்பு கொண்டுள்ளார்.
பிரிஜிட்டின் மகள் லாரன்ஸுடன் மேக்ரான் காதல் வயப்பட்டதாக அவரது பெற்றோர் நினைத்தாலும், அவர் தன்னை விட 25 வயது மூத்த பிரிஜிட்டை மணக்க விரும்பினார்.
திருமணம் உறுதி என்ற மேக்ரான்
அதனைத் தொடர்ந்து தனது 17 வயதில் பிரிஜிடை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருப்பதாக அவர் அறிவித்தார். அவர் கூறியது போலவே 2007ஆம் ஆண்டில் இமானுவல் மேக்ரான் - பிரிஜிட் ஜோடி திருமணம் செய்து கொண்டது.
மேக்ரான் தற்போது பிரிஜிட்டின் ஏழு பேரப்பிள்ளைகளின் வளர்ப்பு தாத்தாவாக உள்ளார்.
காதல் ரகசியம் கூறும் பிரிஜிட்
தங்கள் காதல் குறித்து பிரிஜிட் மேக்ரான் கூறும்போது, 'எங்கள் கதை எந்த நேரத்தில் காதல் கதையாக மாறியது என்பது யாருக்கும் தெரியாது. அது எங்களுக்கு சொந்தமானது, அதுதான் எங்களின் ரகசியம்' என தெரிவித்தார்.
அதேபோல் இமானுவல் மேக்ரானும் தனது மனைவியை பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளார். பிரான்சின் முதல் பெண்மணியாக இருக்கும் பிரிஜிட் மேக்ரானுக்கு 70 வயதாகிறது. ஆனால் அவரது கணவர் 45வது வயதில் இருக்கிறார்.
25 ஆண்டுகள் வித்தியாசத்திலும் இந்த காதல் ஜோடி ஒன்றாக, மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்வில் பயணிப்பது உலக மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



