மேல் மாகாணத்தில் பேருந்துகளில் நடைமுறைக்கு வரும் கடுமையான கட்டுப்பாடு

 மேல் மாகாணத்தில் பயணிக்கும் பேருந்துகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடமிருந்து கூடுதலான கட்டணத்தை அறவிடும் பேருந்து வண்டிகளின் சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


கண்காணிப்புப் பணி

மேல் மாகாணத்தில் உள்ள வீதிகளில் இது தொடர்பான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயணிகள் பார்வையிடும் வகையில் புதிய கட்டணப் பட்டியலை பேருந்து வண்டிகளில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post