விவசாயிகளுக்கான உர விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருட பெரும்போகத்தின் போதே உர விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்
இதேவேளை அவசியமான இரசாயன உரம், சேதன பசளை, விதைகள் உள்ளிட்ட ஏனைய விவசாய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக சகல விவசாயிகளுக்கும் கிவ்.ஆர் குறியீடு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
