பேருந்து கட்டணம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய பேருந்து கட்டணத்தை அறவிடாத பேருந்துகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளை வலியுறுத்தியுள்ளது.

பேருந்து கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் சில பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


மக்களுக்கான வலியுறுத்தல்

இதனை தொடர்ந்து பேருந்து கட்டணம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகளை 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Previous Post Next Post