ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான செயல்

 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானிகளில் ஒருவரான 40 வருட சேவையை நிறைவு செய்த உத்பல குமாரசிங்க, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது கடைசி விமானத்தை நேற்று எடுத்துச்சென்று தனது சேவையில் இருந்து விடைபெற்றுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 40 வருடகால நட்சத்திர பணிக்குப் பின்னர், தனது மகன் முதல் அதிகாரி ரஹல் குமாரசிங்கவுடன் இறுதி விமானத்தை இயக்கி, சிரேஷ்ட விமானி உத்பலா குமாரசிங்க விடைபெற்றுள்ளார்.

இறுதி விமானமான UL 138 மதுரையிலிருந்து கொழும்புக்கு பயணித்து நேற்று (31) பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.


நீர்வணக்கம் செலுத்தி விமானம் வரவேற்பு

மூத்த விமானி தனது கடைசி விமானத்திற்கு துணை விமானியாக தனது மகன் ரஹல் குமாரசிங்கவை அழைத்துச் சென்றுள்ளமையும் சிறப்பு அம்சமாகும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய ஓடுபாதையில் "நீர் வணக்கம்" செலுத்தி இந்த விமானத்தை வரவேற்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1979 ஆம் ஆண்டு உதவி செயற்பாட்டு அதிகாரியாக சேவையில் இணைந்த உத்பலா குமாரசிங்க, 44 வருட சேவையின் பின்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மிக மூத்த விமானிகளில் ஒருவராக ஓய்வு பெற்றுள்ளார்.

Previous Post Next Post