கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு

 கதிர்காமம், வெடி கந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கதிர்காமம், வெடி கந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை குறிவைத்து, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியதை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் தப்பியோடியுள்ளனர்.

பிரதீப் லக்மால் என்ற 46 வயதுடைய தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் வலது காலின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அவருடன் மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post