இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் போலி வைத்தியர்

கொழும்பில் வைத்தியர் போன்று நடித்து ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர் ஒருவர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்தியர் போன்று நடித்து வெளிநாட்டுக்கு நபர்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், ஒருவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 70,000 ரூபாவை ஏமாற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யக்வில, பன்னல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous Post Next Post