காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

 மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் அதிக வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இதன் காரணமாக அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், மனித உடலால் உணரப்படும் வெப்பம் சோர்வை ஏற்படுத்தும் எனவும், நீரிழப்பு மற்றும் அதிக தாகம் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினையை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வயோதிபர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும்,கால்நடைகளை நிழலில் கட்டிவைக்குமாறும், அதிகமாக தண்ணீரை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post