புத்தாண்டு இனிப்பு வகை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

 இலங்கையில் நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் கலாநிதி ரவீந்திர விதானாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் நவீன உணவு முறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையர்கள் முன்னைய காலங்களில் புத்தாண்டு இனிப்புகளை தயாரிப்பது போன்று தற்போதும் இனிப்புகளை தயாரித்து உண்ணுவார்களாயின் அது ஆரோக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post