குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

 லிந்துளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துளை பேரம் தோட்டபகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிர்ழந்துள்ளதோடு, மற்றுமொரு நபர் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (31) வெள்ளிகிழமை காலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலு‌ம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பேரம் தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதுடைய எட்வட் ஜோசப் என்பவர் உயிர்ழந்துள்ளதாகவும் சாகுல் ஹமிட் (வயது 65) காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை லிந்துளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
Previous Post Next Post