இலங்கையில் 16 பேரை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த இளைஞன்

 எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துயரத்தை ஏற்படுத்தியுள்ள மரணம்


சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் இருந்து இறங்குவதற்காக முயற்சித்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அருவியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆபத்தான நிலையில் இருந்த 16 வெளிநாட்டவர்களை அமில மதுசங்க காப்பாற்றியுள்ளார்.

எனினும் ஒரு குழந்தையின் தந்தையான அமில மதுசாங்க உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous Post Next Post