அதிகாலையில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!

 பொலநறுவை - வெலிக்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று (29.03.2023) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் (தம்பட்டை) சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரனை

விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து பற்றிய மேலதிக விசாரனையை வெலிக்கந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post