கடலுக்கு சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி - எதிர்பாராமல் கிடைத்த அதிர்ஷ்டம்

இலங்கையில் மீனவர்கள் வீசிய 2 வலைகளில் 10000 கிலோ கிராம் மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் ஹிக்கடுவ பரேலிய என்ற துறைமுகத்தில் வீசிய வலையில் இந்த மீன்கள் சிக்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனை இழுப்புதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொகை பாரா மீன்கள் வலையில் சிக்கியுள்ளன. முழுமையாக இழுத்து கரைக்கொண்டு வரு பல மணி நேரங்கள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வலைகளிலும் சுமார் பத்தாயிரம் கிலோ பாரா மீன்கள் கிடைத்தமையினால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous Post Next Post