இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய தூதுவர்!

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens)  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய தூதுவர்! | Gave A Strong Warning To The Sri Lankans Refugee

ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாக போல் ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கூறியுள்ளார்.

ஆட்கடத்தல் என்பது புதிய விடயமல்ல

ஆட்கடத்தல் என்பது புதிய விடயமல்ல பல வருடங்களாக காணப்படுகின்றது இலங்கை இந்த விடயத்தை கையாளும் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா ஈடுபட்டுள்ளது எனவும்   தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய தூதுவர்! | Gave A Strong Warning To The Sri Lankans Refugee

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு எவராவது விரும்பினால்அதற்கான சிறிதளவு வாய்ப்பும் இல்லை என்பதை தெரிவிப்பதற்கான தீவிரபிரச்சாரம் இலங்கையில் இடம்பெறுகின்றது எனவும் அவர் ( Paul Stephens) கூறினார்.

எந்த படகும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை சட்டவிரோத குடியேற்றவாசிகள் எவரும் அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை எனவும் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post