முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் பலரின் ஆசை. ஆனால் முகத்தில் வரும் பருக்கள், கரும்புள்ளிகள் என்பன முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன.
ஆனால், ஒரு சிலரின் முகச் சுருக்கம் ஏற்பட்டு வயதுக்கு மீறிய தோற்றத்தைக் கொடுக்கும். அது மிகுந்த கவலையைக் கொடுக்கும். எனவே இந்த முகச் சுருக்கத்திலிருந்து தீர்வு காண என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்...
- சருமப் பொலிவுக்கு தேவையான விட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ள உணவுகளாக காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- வாரம் ஒருமுறை நீராவி பிடித்தால் முகத்திலுள்ள அழுக்குகள் வெளியேறும்.
- மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அதிகமான கவலை, கோபம் கொள்பவர்களுக்கு முகச் சுருக்கம் ஏற்படும்.
- முகப்பருக்களை கிள்ள வேண்டாம். இது நிரந்தரமான வடுக்களாக மாறிவிடும்.
- இயற்கைப் பொருட்களை சரும பராமரிப்புக்கு உபயோகப்படுத்துங்கள்.
- இரவில் நன்றாக தூங்குங்கள்.
- சருமத்தின் ஆரோக்கியம் பாதிப்பதில் மலச்சிக்கலும் ஒரு காரணம்.
- கடலை மா, ரோஸ் வோட்டர், எலுமிச்சை சாறு என்பவற்றை முகத்தில் பூசி தேய்த்துக் கழுவவும். இதனால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.
- தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
- சருமம் வறட்சியடையும்போது அதற்கு தேவையான மொய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.

