கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஸாஹிராக் கல்லூரிக்கு கணிணி அன்பளிப்பு

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஸாஹிராக் கல்லூரிக்கு கணிணி அன்பளிப்பு

( கல்முனை நிருபர்)

கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு(தேசிய பாடசாலை) கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கணனி இயந்திரம் ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார்.




மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் அனுசரனையில் அண்மையில் இடம்பெற்ற"மெற்றோ பொலிட்டன் ஸஹ்ரியன் பிரிமியன் லீக் ZPL Season ll " சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களிடம் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபிர்,கணிணி ஒன்றின் தேவை கருதி விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக் கொண்டகல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (10)அவரது இல்லத்தில் வைத்து கணிணி இயந்திரம் ஒன்றினை அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களிடம் கையளித்தார்.

இதன் போது ஆசிரியர்களான ஏ.எல்.எம்.றிசான், எம்.ஜின்னா மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post