பின்லாந்து மந்தநிலையை எதிர்கொள்வதால் பிரதமர் சன்னா மரின் ஆட்சியை தக்க வைக்க போராடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் இளம் பிரதமர்
கடந்த 2019ஆம் ஆண்டு பின்லாந்து நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர் சன்னா மரின். அப்போது தனது 34 வயதில் ஆட்சியைப் பிடித்ததால், உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
பின்லாந்தில் 2023-2027ஆம் ஆண்டுக்கானநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
ஆட்சியை தக்க வைக்க போராட்டம்
இந்த நிலையில் சன்னா மரின் தனது ஆட்சியை தக்க வைப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் எதிர்க்கட்சி வைக்கும் அடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் நாட்டின் மந்தநிலை என்று கூறப்படுகிறது.
மத்திய-இடது கூட்டணியின் கடன்-எரிபொருள் செலவினங்களுக்காக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட அவரது ஆட்சி, ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடி பின்லாந்தை கடுமையாக பாதித்த நேரத்தில் ஊடகங்களாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
கருத்துக் கணிப்பு
சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் மூன்று கட்சிகளும் மோதிக் கொள்கின்றன. அவற்றில் தேசியக் கூட்டணி 19.8 சதவீத ஆதரவுடனும், மரின் சமூக ஜனநாயக கட்சியினர் மற்றும் ஃபின்ஸ் கட்சி தலா 19.2 சதவீதத்துடனும் முன்னிலையில் உள்ளன.
சன்னா மரின் தனிப்பட்ட முறையில் பிரபலமாக இருந்தாலும், அவரது புகழ் பாராளுமன்ற வாக்கெடுப்பில் கட்சிக்கு வெற்றியாக மாறுமா என்பது தெளிவாக இல்லை.
இதற்கிடையில், பொருளாதார வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான செலவு முக்கியமானது என சன்னா மரின் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.



