நாங்கள் சமையலுக்காகப் பயன்படுத்தும் முருங்கைக்காயில் பலவித ஆரோக்கிய நலன்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். எனவே எலும்புகள் மனிதர்களுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகும்.
முருங்கைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவருகின்றவர்களுக்கு எலும்புகள் உறுதியடைவதோடு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களும் வெகுவாகக் குறைவடையும்.
முருங்கைக்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் நீரிழிவு நோய்க்கெதிராக சிறப்பாக செயற்படக்கூடியவை. குறிப்பாக முருங்கைக்காயானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கின்ற தொழிற்பாட்டை மேற்கொள்கின்றது. இதனால் நீரிழிவு நோயினால் அவதியுறுவோருக்கு நன்மையை உண்டாக்கும் ஒரு இயற்கை உணவாக முருங்கைக்காய் உள்ளது.
முருங்கைக்காயில் எமது இரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை அழிக்கும் வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளடங்கியுள்ளன. எனவே முருங்கைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கப்பெற்று இரத்தம் சுத்தமாகி, உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள முடியும்.
செரிமானத்தை அதிகரிக்கும் திறன் முருங்கைக்காய்க்கு அதிகம் உள்ளது. பசியைத் தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க முருங்கைக்காய் உதவுகின்றது. அத்துடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
முருங்கைக்காயில் விட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதைத் தடுக்கின்றது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகின்றது.
