இலங்கையின் 6000 கோடி டொலர் பணம்! பதுக்கி வைத்துள்ள வெளிநாடுகளிலுள்ள கோடீஸ்வரர்கள்

 இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான 60 பில்லியன் டொலர் (6000 கோடி டொலர்) பணம் நாட்டிற்கு வரவில்லை என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதிகளின் ஆதரவோடு வெளிநாடுகளில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர்கள் அதை பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆட்சியாளர்கள் அவர்களது நெருங்கியவர்களின் துணையோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்களே எமது நாட்டின் டொலர் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Previous Post Next Post