எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி.. ஆப்ரிடி 40 லட்சம் கொடுத்தார்..முன்னாள் பாக் வீரர் பகீர் புகார்

 லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே பல சர்ச்சைகளும் மர்மங்களும் புதைந்து கிடக்கும். பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே இன்னும் வெளிவரவில்லை.இதே போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல்வேறு வீரர்கள் சூதாட்டம் புகாரில் சிக்கிருக்கிறார்கள். சூதாட்டம் செய்யவில்லை என்பதற்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் கடந்த 2010 ஆம் ஆண்டு ஹைதர் என்ற பாகிஸ்தான் வீரர் அறிமுகமாகி மூன்று மாத காலத்திலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினார்.

உடல் நலம் பாதிப்பு இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்காக 79 ஒரு நாள் மற்றும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் இம்ரான் நசீர் விளையாடுகிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

விஷம் கலந்தார்கள் அப்போது என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் யாரோ சேர்த்து இருக்கிறார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக நமது உடல் உறுப்புகளை பாதிக்க வைக்கும். நமது எலும்பு முட்டுகள் எல்லாம் பாதிக்கப்படும். இந்த நோயால் நான் 6 ஆண்டுகாலம் அவதிப்பட்டு வந்தேன். நான் கடவுளிடம் வேண்டியது எல்லாம் நான் படுத்த படுக்கையாக மாறிவிடக்கூடாது என்பதுதான்.

தீங்கு நினைக்கவில்லை என்னுடைய பிரார்த்தனை நிறைவேறியது. தற்போது எல்லாம் நான் நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னை பார்க்கும் பலரும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் சாப்பிடுவதில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது. இந்த விஷம் உடனடியாக வேலை செய்யாது. பல ஆண்டுகள் கழித்து தான் இது உங்களை பாதிக்கும். நான் யாருக்காகவும் எதையும் தீங்கு நினைத்ததில்லை.

ஆப்ரிடியின் செயல் ஆனால் என்னை ஏன் கொல்ல முயற்சித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் மருத்துவ சிகிச்சைக்காக செலவானது. எனது பெரிய சிகிச்சை ஒன்றுக்கு கொஞ்சம் கூட காசு இல்லை. அப்போது எனது நிலையை அறிந்த சையது அப்ரிடி எனக்காக 40 லட்சம் வரை செலவு செய்தார். எனது மருத்துவருக்கு அப்ரிடி தினமும் பணத்தை அனுப்பி விடுவார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை, என் சகோதரன் பிழைக்க வேண்டும் என அவர் மருத்துவரிடம் கூறியிருக்கிறார்.

பரபரப்பு புகார் ஆப்ரிடிக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. இந்த பணம் குறித்து அவர் எதுவுமே கேட்டது கிடையாது. என்னுடைய மருத்துவரும் என்னை ஏமாற்றியதில்லை. சிகிச்சைக்குத் தேவையான பணத்தை மட்டுமே வாங்கி இருக்கிறார் என இம்ரான் நசீர் கூறியுள்ளார். இம்ரான் நசீரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது .2007 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இம்ரான் நசீர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அவர் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தமக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக இம்ரான் நசீர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post