பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நமீபியா அணி 381 ஓட்டங்கள் குவித்தது.
வாணவேடிக்கை காட்டிய நமீபியா
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பப்புவா நியூ கினியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணியில் தொடக்க வீரர் ஷான் போவ்சே ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய லிங்கன் ஒரு ரன்னில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தொடக்க வீரர் நிக்கோ டேவினுடன் கைகோர்த்த கேப்டன் எராஸ்மஸ் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
இவர்கள் கூட்டணி 151 ஓட்டங்கள் குவித்தது. சதத்தை நெருங்கிய போவ்சே 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஈட்டன் 61 ஓட்டங்கள் விளாசினார்.
எராஸ்மஸ் சதம்
இதற்கிடையில் சதம் அடித்த எராஸ்மஸ் 113 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக ஓட்டங்கள் எடுக்க, நமீபியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்கள் குவித்தது. பப்புவா நியூ கினியா தரப்பில் செமோ கமியா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.