கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா பணம் வழங்கி வைப்பு.

 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.


இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.


Previous Post Next Post